நான் கல்லூரி படித்து கொண்டு இருக்கும் போது தான் பார்த்திபன் நடித்த குடைக்குள் மழை படம் வந்தது. தியேட்டர் போய் படம் பார்த்தும், மதுமிதா கூட ஒரு லிப் கிஸ் அடிக்கும் சீன் மட்டும் தான் ஞாபகம் இருக்கிறது. படம் என்ன கதை என்று கூட தெரியவில்லை. அதற்கு பிறகு அவரின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை தான் தியேட்டரில் பார்த்தேன். அந்த படத்தில் கடைசியாக டைடில் பாடலாக live the moment பாடல் வரும். … Continue reading பார்த்திபன் படங்களும் நானும்…
Tag: Amazon Prime
Ela Veezha Poonchira – Malayalam – 2022
Ela Veezha Poonchira என்கிற மலையாள படம் Shahi Kabir என்பவர் இயக்கத்தில் Soubin Shahir கதாநாயகனாக நடித்து 15 July 2022 ல் வெளிவந்த ஒரு கிரைம் த்ரில்லர் படம். தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளிவந்து இருக்கிறது. போலீஸ் கதை, கிரைம் படம் என்றால் கதைகளுக்கு பஞ்சம் இல்லை. அதை சொல்லும் விதத்தில் தான் அந்த படம் கவனம் ஈர்க்கும். அப்படி கதை சொல்லும் விதத்தில் கவனம் ஈர்த்த படம் தான் இது. … Continue reading Ela Veezha Poonchira – Malayalam – 2022
The Terminal – English – 2004
The terminal என்கிற படம் 2004 வருடத்தில் Steven Spielberg இயக்கத்தில் Tom Hanks நடிப்பில் வெளியான ஒரு ஹாலிவுட் படம். பிரான்ஸ் ஏர்போர்ட்டில் 1988 வருடம் முதல் 2006 வரை ஏர்போர்ட் டெர்மினலில் வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம். விக்டர் நவோஸ்கி (Viktor Navorski ) என்பவர் காரகோசியா ( Krakozhia) என்கிற நாட்டில் இருந்து அமெரிக்கா வருகிறார் அதே நேரத்தில் அவரோட நாட்டில் உள்நாட்டு குழப்பம் ஏற்படுகிறது. அதனால் அமெரிக்க … Continue reading The Terminal – English – 2004
Clarkson’s Farm – English -2021
Clarkson's Farm என்று ஒரு பிரிட்டிஷ் டாக்குமெண்டரி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 2021 வருடத்தில் வெளிவந்து இருக்கிறது. Jeremy Clarkson என்பவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு செலிபிரிட்டி. அவர் ஒரு ஆயிரம் ஏக்கர் பண்ணையை வாங்கி, விவசாய அனுபவம் எதுவும் இல்லாமல் விவசாயம் செய்வதை பற்றிய ஒரு டாக்குமெண்டரி சிரீஸ் தான் Clarkson's Farm. இதை பார்க்கும்போது தான் தெரிகிறது எந்த நாடாக இருந்தாலும்எவ்வளவு நிலம் இருந்தாலும் விவசாயத்தில் லாபம் பார்ப்பது என்பது குதிரை … Continue reading Clarkson’s Farm – English -2021
Ponniyin Selvan: I – Tamil – 2022
கோகுலம், ஆனந்த விகடன், குமுதம் என்று வார பத்திரிகைகளை தாண்டி நாவல்கள் படிக்க ஆரம்பித்தது நான் மேல்நிலை வகுப்பிற்கு வந்த பிறகு தான். நான் ஆர்வமாக படிக்க ஆரம்பித்ததை பார்த்து எங்கள் வீட்டில், பொன்னியின் செல்வன் படி நல்லா இருக்கும் என்று சொன்னார்கள். அப்போது எங்கள் ஊரில் இருக்கும் லைப்ரரியில் அப்பா உறுப்பினராக இருந்தார். உறுப்பினருக்கு கொடுத்து இருந்த இரண்டு டோக்கன் வைத்து ஒரு தடவையில் இரண்டு புக் எடுக்க முடியும். அதை வைத்து ஒவ்வொரு புக்கா … Continue reading Ponniyin Selvan: I – Tamil – 2022
Viruman – Tamil – 2022
விரும்பன் (Viruman) முத்தையா ( M. Muthaiah) இயக்கத்தில் கார்த்தி அதிதி சங்கர் மற்றும் பலர் நடித்து வெளிவந்து இருக்கும் ஒரு தமிழ் படம். ஆகஸ்ட் 12,2022 அன்று தியேட்டர்களில் வெளியாகி தற்போது அமேசான் பிரைம் ( Amazon Prime) ஓடிடி தளத்தில் வெளிவந்து இருக்கிறது. இந்த படத்தை இப்போது பெரும்பாலான பேர் பார்த்து இருப்பார்கள். இல்லை என்றால் படத்தை பற்றி படித்தோ வீடியோ பார்த்து தெரிந்து இருப்பார்கள். அப்புறம் எதற்கு இந்த பதிவு என்றால் இந்த படத்தை … Continue reading Viruman – Tamil – 2022
Theerpugal Virkapadum – Tamil – 2021
தீர்ப்புகள் விற்கப்படும் (Theerpugal Virkapadum) தீரன் (Dheran) என்பவர் இயக்கத்தில் சத்தியராஜ் ( Sathyaraj ) ஹீரோவாக நடித்து 2021 ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் ஆக்ஷன் படம். தற்போது அமேசான் பிரைம் ( Amazon Prime) ஓடிடி தளத்தில் வெளிவந்து இருக்கிறது. கதை என்று பார்த்தால் தற்போது வரும் வழக்கமான ஒரு கதை தான். சத்தியராஜ் சீனியர் டாக்டர். அவர் பயிற்சி டாக்டரான தன் மகளுடன் தனியாக வசித்து வருகிறார். சினிமாவில் வரும் அப்பா மகள் … Continue reading Theerpugal Virkapadum – Tamil – 2021
Thirteen Lives – Survival movie – 2022
Thirteen Lives என்கிற படம்Ron Howard என்பவர் இயக்கத்தில் survival drama வாக வெளிவந்து இருக்கும் படம்.தற்போது அமேசான் பிரைம் ல (amazon prime) இருக்கிறது.இந்த படமானது உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுத்த படம். 2018 வருடத்தில் தாய்லாந்தில் இருக்கும் Tham Luang cave குகையில் மாட்டிக் கொண்ட 12 சிறுவர்கள் மற்றும் அந்த சிறுவர்களின் கால்பந்து பயிற்சியாளரை மீட்ட கதை தான் படம். ஜுனியர் புட்பால் டீம்மான அவர்கள் விளையாட்டு பயிற்சி முடித்து விட்டு … Continue reading Thirteen Lives – Survival movie – 2022







