போகுமிடம் வெகு தூரமில்லை…

போகுமிடம் வெகு தூரமில்லை படத்தை அமேசான் பிரைம் ல வந்த பிறகு தான் பார்த்தேன். அமரர் ஊர்தி டிரைவராக இருக்கும் விமல், தன் குடும்ப பணத் தேவைக்காக ஒரு விபத்தில் இறந்த பெரியவரை திருநெல்வேலிக்கு கொண்டு செல்கிறார்.‌ போகும் வழியில் லிப்ட் கேட்டு தொற்றிக் கொள்கிறார் கூத்து கலைஞரான கருணாஸ். இறந்த பெரியவரின் குடும்ப பிரச்சினை மற்றும் இவர்கள் பயணத்தில் ஏற்படும் பிரச்சினை தான் மீதி படம். இதுவரை ஜாலி கேரக்டரில் மட்டும் நடித்து கொண்டு இருந்த … Continue reading போகுமிடம் வெகு தூரமில்லை…

தியேட்டர்

நான் சின்ன பையனாக இருக்கும் போது எங்கள் ஊரில் மூன்று தியேட்டர் தான் இருக்கும். இப்போது இரண்டு தான் ஓடிக் கொண்டு இருக்கிறது. இப்போது மாதிரி அப்போது எல்லாம் புது படங்கள் எல்லாம் நேரடியாக எங்கள் ஊருக்கு வராது. அதிலும் ரொம்ப ஹிட் படம் என்றால் எங்கள் ஊருக்கு வர ஒரு வருசம் கூட ஆகும். அதுவும் தீபாவளி பொங்கல் பண்டிகை போது தான் வரும். அதனால்  படம் பார்க்க என்று முடிவு எடுத்து விட்டால் மூன்று … Continue reading தியேட்டர்

இரவு

டிவியின் சத்ததில் சில்வண்டு சத்தம் காணாமல் போய் விட்டன செல்போன் வெளிச்சத்தில் இருளும் கரைந்து விட்டது அமைதியான இடம் தேடி அலைந்து கொண்டிருக்கிறது இரவு.... -வழிப்போக்கன்

தோசை

ஒரு முறை நாகர்கோவிலில் வேலை விசயமாக போய் இருந்த போது அங்கு உள்ள அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தோம். அன்று இரவு சாப்பாட்டுக்கு அதன் அருகில் இருந்த ஒரு சின்ன கடையில் ஒரு செட் சப்பாத்தி சாப்பிட்டேன். ஆனாலும் சாப்பிட திருப்தி வரலை என்று ஒரு சாதா தோசை கேட்டேன்.கடைக்காரர் ஒன்னு போதுமா என்று திரும்ப திரும்ப கேட்டார். நானும் ஒன்னு போதும் என்று சொல்லி விட்டேன். தோசை இலைக்கு … Continue reading தோசை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பள்ளி கல்லூரி காலங்களில் நம் பிறந்தநாளை நமக்கு முன்னாலேயே ஞாபகம் வைத்து நண்பர்கள் அனைவரிடமும் சொல்லி விட  நண்பன் ஒருவன் இருப்பான். நமக்கு வாழ்த்துக்கள் உடனே ட்ரீட் வைக்கும் செலவும் சேர்ந்தே வரும். ட்ரீட் என்றவுடன் பெரியதாக எண்ணி விட வேண்டாம், பக்கத்தில் இருக்கும் டீ கடையில் இருந்து வடை டீ வாங்கி தருவதில் இருந்து காலேஜ் கேண்டின் செலவு வரை தான் நாங்கள் கொடுத்து கொள்ளும் ட்ரீட். படிப்பு முடிந்த பிறகு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வீட்டில் … Continue reading பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சிடி பிளேயர்

நான் காலேஜ் படிக்கும்போது தான் சி.டி பிளேயர் வாங்க வீட்டில் அனுமதி கொடுத்தாங்க.சந்தோஷமாக அப்பா கூட வாங்க போனா  சிடி பிளயேர் வங்கிட்டு நிறைய சாமி பாட்டு சி.டி வாங்கிட்டு எதாவது  ஒரு சினிமா பாட்டு வாங்கிகோனு அப்பா சொல்லிடார்.காற்று போன பலூன் மாதிரி மனசு ஆகி விட்டது. ஆனாலும் நான் மஜூனு,மின்னலே பட பாடல் சிடிய வாங்கிட்டு போய்,சிடி தேய்ர அளவுக்க போட்டு வீட்டையே ஏத்துன வெறுப்புல அம்மா கையில் காசை கொடுத்து வேற சிடி … Continue reading சிடி பிளேயர்

வந்தார்கள் வென்றார்கள்

பள்ளி பருவத்தில் இருந்தே எனக்கு வரலாற்று பாடம் என்பது மிகவும் பிடித்த ஒன்று. அடுத்தவர்கள் வாழ்க்கை கதைகளை படிப்பது என்பது ஒரு தனி ஆர்வம் பெரும்பாலான பேருக்கு வரத்தான் செய்யும். அதில் நான் மட்டும்  விதிவிலக்கா என்ன, கிடைக்கும் போது எல்லாம் ஏதாவது வரலாறு புத்தகம் கிடைத்தால் படித்து விடுவேன். அப்படி சில நாட்களாக படித்து கொண்டு இருந்து இன்று படித்து முடித்த புத்தகம்  கார்டூனிஸ்ட் மதன் எழுதிய  வந்தார்கள் வென்றார்கள். முகலாயர்கள் வரலாற்றை ஏற்கனவே படித்து … Continue reading வந்தார்கள் வென்றார்கள்

போபால்

போபால் என்றவுடன் மத்திய பிரதேசத்தின் தலைநகர் என்ற ஞாபகத்தை விட அங்கு நடந்த விஷ வாயு  பேரழிவு தான் பெரும்பாலான பேருக்கு ஞாபகத்திற்கு வரும். 1984 வருடத்தில் நடந்த துயரம் என்றாலும் அந்த வலி காலம் முழுவதும் தொடர்வது தான். அந்த விஷ வாயு கசிவு பிரச்சினையின் போது நடந்த விசயத்தை வைத்து  எடுத்த சீரியஸ் தான் The Railway Men. இந்த சீரியஸ் நெட்ஃபிக்ஸ் ஒடிடி தளத்தில் இருக்கிறது. இந்த சீரியஸ் வந்த உடனே இரண்டு … Continue reading போபால்

ஏக்கம்

இழந்துவிட்டவர்களின்சாயலை அடுத்தவர்களிடம்தேடும் மனதில்இழந்தவர் திரும்பி  கிடைத்துவிடுவார்களா என்கிறஏக்கம் தான்... வழிப்போக்கன்